Saturday 25 February 2012

மொக்கை பதிவரின் மொக்கை பதில்கள் #3





26.   நீங்க இது வரை விட வேண்டும் என்று நினைத்து விட முடியாத கெட்ட பழக்கம் எது? (ஒண்ணு சொல்லுங்க போதும்) - சுதா, பெங்களூர்

னக்கு என்னவோ 75 கெட்ட பழக்கம் இருக்கற மாதிரியும், அதுல ஏதோ ஒண்ணு சொல்லுங்கன்னு கேட்கற மாதிரியும் இருக்கே? உலகத்துக்கே தெரியும் எனக்கு சிகரெட், தண்ணி (சரக்கு), காஃபி, டீ, அசைவம் என எந்த கெட்ட பழக்கமும் இல்லைன்னு.. என் கிட்டே இருக்கற ஒரே கெட்ட பழக்கமா அம்மா, அப்பா சொல்றது சினிமா ஒண்ணு விடாம பார்க்கும் ஆளா இருக்கான்கறதுதான்.. அதனால ஒண்ணும் பிரச்சனை இல்லை.. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு ரிலாக்ஸ் வேணும், அது எனக்கு சினிமாவா இருந்துட்டு போகுது.. இப்போ என்ன..?


27.  நாளுக்கு இரண்டு பதிவு வீதம் பதிவு போடுறீங்களே, உங்கள் பதிவை நீங்கள் திரும்ப படிச்சு பார்க்க நேரம் இருக்கா?

நான் போக்கிரி விஜய் மாதிரி, ஒரு தடவை போஸ்ட் போட்டுட்டா என் போஸ்ட்டை நானே படிக்க மாட்டேன்.. ( ஏன்னா ஆல்ரெடி 3 தடவை படிச்சு பார்த்துட்டு, மிஸ்டேக் எல்லாம் கரெக்ட் பண்ணிட்டுதானே  பப்ளீஷ் பண்றேன்?)


28. டிவிட்டில் சிலசமயம் சிலரை அளவுக்கு அதிகமா கிண்டல் செய்து அவங்க பீல் செய்தா காணமல் போயிடுறீங்க? உங்க ஆக்சுவல் ரியாக்சன் என்ன?

னக்கு கிடைக்கற நேரம் ரொம்ப கொஞ்சம்.. கேப் கிடைச்சா 5 ட்வீட் போட்டுட்டு போயிடுவேன்.. அந்த கேப்ல என்னை காணாதவங்க கிசு கிசு பரப்புவாங்க.. பிரச்சனைன்னா ஓடிடறான்.. ஆண்கள் கேள்வி கேட்டா பதில் சொல்றதில்லைன்னு.. இவங்களா கிளப்பி விடறதுதான்.. ஆனா சில சமயம் குறிப்பிட்ட பெண் பதிவர்களை நகைச்சுவையா கிண்டல் செய்யறப்ப அது ஓவர் டோஸ் ஆகி அவங்க மனம் வருத்தப்பட்ட சம்பவங்கள் உண்டு, என் மேல் தப்பு இருந்தா டைம் லைனில், டி.எம்.மில் மன்னிப்பு கேட்க தயங்கியதில்லை..!!


29. சில கீச்சர்கள் பற்றி கற்பனை பதிவு போட்டீங்களே,கொஞ்சம் வரம்பு மீறியதா தோணலையா?  -by @jroldmonk

மா, கோவை, சிங்கப்பூர் ட்வீட்டர்களை பற்றி தலா ஒரு பதிவு போட்டேன்.. 2ம் காமெடிக்காகத்தான்.. ஆனால் அதில் ஒரு பதிவு தங்கள் குடும்பத்தை மனம் வருத்தம் செய்ய வைத்து விட்டது என்று அந்த ட்விட்டர் சொன்னதும் அந்த பதிவை அகற்றி விட்டேன்..!!


30.  புதியதாக பதிவு எழுத வருபவர்களுக்கு தங்களின் அட்வைஸ்? :- By @Prabhu_B

நிறைய படியுங்க.. நீங்க ஒரு போஸ்ட் போடனும்னா 10 போஸ்ட் படிச்சிருக்கனும்.. நீங்க 10 பேர்க்கு போய் படிச்சு கமெண்ட் போட்டு, ஓட்டு போட்டுட்டு வந்தாத்தான் அதுல பாதிப்பேராவது உங்க பதிவுக்கு வருவாங்க.. அதாவது நீங்க உங்க வீட்டு விஷேஷத்துக்கு மொய் வரனும்னு நினைச்சா ஆல்ரெடி நீங்க மொய் வெச்சிருக்கனும்.. எழுதுவது எல்லாருக்கும் உபயோகமாக இருக்கனும், மனம் களிக்கும்படி இருக்கனும், மற்றவங்க முகம் சுளிக்கும்படி இருக்கக்கூடாது.!


31. இந்த தீராத கலைதாகம்(!) உங்களுக்கு எப்டி,எப்பருந்து வந்துச்சு...? உங்க இன்ஸ்பிரேஷன் யாரு?  by @siva_says

நான் எப்பவும் வெய்யில்லயே சுத்திட்டு இருப்பேன், ஏன்னா என் வேலை அப்படி.! வெளீல அலையற வேலை.. அதனால வீட்டுக்கு வந்ததும் செம தாகம் எடுக்கும். கொஞ்சம் தண்ணீர் குடிச்சுட்டு போஸ்ட் போட ரெடி ஆகிடுவேன்.!!!  ( ஏய்யா கேள்விக்கு இடைல ஆச்சரியக்குறி போட்டுட்டா கலாய்க்கறதா ஆகிடுமா?)

னக்கு இன்ஸ்பிரேஷன் சேட்டைக்காரன், குசும்பன், பன்னிக்குட்டி ராம்சாமி, சிரிப்புப்போலீஸ் உட்பட நகைச்சுவையா யார் எல்லாம் எழுதறாங்களோ அவங்க எல்லாம்.. ( இப்போ லேட்டஸ்ட் ஹிட்டர் கட்டதுர கூட எனக்கு இன்ஸ்பிரெஷன் தான்.. )


32.  உங்களை ஃபிகர் என்று அழைக்கலாமா??    By @RealBeenu

ரு ஃபிகரே என்னை ஃபிகர் என்று அழைக்குதே அடடே..!!

"ஹலோ.. பொதுவா பொண்ணுங்க  திட்டுனாலே நாங்க சிரிப்போம், பாராட்டுனா கேட்கவா வேணூம்.. நீங்க என்னை செம கட்டை, சூப்பர் ஃபிகர் இப்படி எப்படி கூப்பிட்டாலும் கோபமே பட மாட்டேன்.. ஏன்னா நாங்க நல்லவங்கங்க ங்க..!!!!".


33. மென்ஷன்களுக்கு இப்போதெல்லாம்  பதில் போடுவதில்லை ஏன்? சிலரிடம் மட்டும் பேசுகிறீர் அது ஏன்? காரணம் ?   By @soniaarun

மென்ஷன் பார்க்கவே கொஞ்ச நாளாத்தான் கத்துக்கிட்டு இருக்கேன்.. இனி முடிஞ்ச வரை போடறேன்.. எனக்கு டைம் ரொம்ப கம்மி.. இருக்கற கொஞ்ச நேரத்துல ட்வீட்ஸ் போடனும், பிளாக் போஸ்ட் போடனும், கமெண்ட்க்கு ரிப்ளை போடனும், மொய் வைக்கனும் (பிளாக்ல).

சிலர்ட்ட மட்டும் பேசறேன்னா - யார் நம்ம வேவ் லெங்க்த்க்கு செட் ஆகறாங்களோ அவங்க கூட பேசறேன்.. இப்போ உங்களை என்ன திட்டுனாலும் உங்களூக்கு கோபம் வராது.. கலாய்ச்ச்சாலும் ஜாலியா எடுத்துக்குவீங்க, சீரியஸ் ஆக மாட்டீங்கன்னா உங்க கிட்டே பேசுவேன்.. வீட்டை விட்டு வெளீல வர்றப்பவே சண்டைக்கு தயாரா வாளோட வந்தா..? ( வாள் பொண்ணை சொல்லலை.. ).

34. பிகர், கில்மா என்ற வார்த்தைகள் தான் உங்களுக்கு அதிகம் பிடித்த வார்த்தைகளா?

கூகுள் சர்ச்ல மக்களால அதிகம் தேடப்படும் வார்த்தைகள் என்ன-னு ஒரு கணக்கெடுத்தேன். அதுல நாகரீகமான வார்த்தைகள் இந்த ரெண்டும் தான்.. இந்த வார்த்தைகளை என் பிளாக்ல ட்வீட்ஸ்ல அதிகம் பயன் படுத்தறப்போ கூகுள் சர்ச்ல என் பிளாக் தட்டுப்படும், அது ஒரு மார்க்கெட்டிங்க் டெக்னிக் வேற ஒண்ணும் இல்லை.


35. டைம் லைனில் ஒருவர் போடும் த்வீட்டை வைத்தே பல ட்வீட் போடுகிறீரே அது எப்படி? ஏன் இப்படி எல்லாரையும் கலாய்க்கிறீங்க, அதுவும் மென்ஷன்  போடாமலேயே?

சொந்தமா சரக்கு இருக்கறவன் வந்தமா ட்வீட்ஸ் போட்டமா போனோமான்னு போயிடுவான், இல்லாதவன் மற்றவங்க போடற ட்வீட்ஸ்ல இருந்து ஒண்ணு புதுசா உருவாக்குவான் 'ரீமிக்ஸோ டெக்னாலஜி'னு அதுக்கு பேரு... ஹி ஹி..!!!

மென்ஷன் போட்டு கலாய்ச்சா சண்டை வந்துடும். பொதுவா சொன்னா யாரும் கேட்க மாட்டாங்க, கேட்டாலும் எஸ் ஆகிடலாம்.. நாங்க எல்லாம் அட்டாக் பண்றப்பவே ஓடறதுக்கு ரோடு எங்கே இருக்குன்னு பார்க்கற ஆளுங்க... ஹி ஹி..!!!!
.
.

Saturday 18 February 2012

விமர்சனத்தில் சொதப்புவது எப்படி.?





காதலில் சொதப்புவது எப்படி.?

திரை விமர்சனம்


*காதலில் சொதப்புவது எப்படி? என்ற 8 நிமிட குறும்படம் மூலம் பலரின் கவனம் ஈர்த்த  பாலாஜிமோகன் அதை 2 மணிநேர படமாக உருவாக்கி  அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்….

*அறிமுக இயக்குநர் பாலாஜி மோகனுக்கு வாழ்த்துக்கள், சிறப்பான படைப்பைத்
தந்ததற்காக.!

*யூட்யூப் இணையத்தில் லட்சோபலட்சம் நபர்களால் பார்த்து ரசிக்கப்பட்ட படம் என்பதால் இயக்குநர் மீது எதிர்பார்ப்பு அதிகம். எதிர்பார்ப்பை பொய்யாக்காத இயக்குநருக்கு பூங்கொத்து கொடுத்து பாராட்டலாம்.

கதை:

*காதல் படங்களில் கதை என்ற  ஒன்றை எதிர்பார்க்கக் கூடாது.இதிலும் அப்படித்தான். இசிஇ படிக்கும் மாணவர் அருணாக சித்தார்த், கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவி பார்வதியாக அமலாபால், இவர்களின் காதல் சொதப்பல்கள்தான் கதை.

*காதலியை சந்தித்தது, காதலில் சொதப்பியது, என அனைத்தையும் சித்தார்த்
ப்ளாஷ்பேக்காக சொல்கிறார்.  பிரிந்த காதலர்கள் எதனால் பிரிந்தார்கள், இறுதியில் என்ன ஆனார்கள் என்பது க்ளைமாக்ஸ்.

*சித்தார்த், அமலாபால், காதலுக்கு நடுவே நண்பர்களின் காதல், பெற்றோர்களின் காதல் என அனைத்தையும் அழகாக சொல்லியிருக்கிறார்  பாலாஜிமோகன்.

ஒளிப்பதிவு:

*நீரவ்ஷா தன் கேமரா மூலம் இந்த படத்தை மேலும் அழகாக்கியிருக்கிறார் என்றால் அது மிகையல்ல. அமலாபாலின் தந்தை சுரேஷின் பஜாஜ் ஸ்கூட்டர், சித்தார்த், அமலாபாலின் மொபைல் போன் போன்ற சின்ன சின்ன விஷயங்கள் கூட அழகாகக் காட்டுகிறது நீரவ்ஷாவின் கேமரா. ஸோ க்யூட் ஒளிப்பதிவு…!!!

இசை:

*தெலுங்குப் படங்களுக்கு மட்டுமல்ல தமிழ்ப் படங்களுக்கும் தன்னால் தரமான இசையைக் கொடுக்க முடியும் என நிரூபித்திருக்கிறார் தமன்.S.

*பின்னணி இசையும் சூப்பர். பார்வதி மற்றும் அழைப்பாயா,  தவறுகள் உணர்கிறோம், ஆனந்த ஜலதோஷம் என பாடல்கள் சூப்பர். வாழ்த்துக்கள் மதன்கார்க்கி.

ஹைலைட்ஸ்:

*சித்தார்த்-அமலாபால் கெமிஸ்ட்ரி.

*குறும்படத்தில் நண்பர்களாக நடித்தவர்களையே இதிலும் அதே ரோலில் நடிக்க
வைத்திருப்பது…

*சித்தார்த்தின் நண்பராக வரும் சிவா அசத்தியிருக்கிறார், இனி நிறைய
வாய்ப்புகள் தேடிவரும் அவரை…

*ஹீரோ, ஹீரோயின் இவர்களின் பெற்றோர் மற்றும் அவர்கள் காதலை அழகாக சொன்ன விதம்…

*லொக்கேஷன், இசை, ஒளிப்பதிவு, காஸ்ட்யூம்ஸ் என அனைத்தும் சிறப்பு…..

ரசனைமிகுந்த காட்சிகள்:

*சித்தார்த் ப்ளாஷ்பேக்கில் காதலை விவரிப்பது…..

*அமலாபாலிடம் போன் நம்பர் வாங்கும் காட்சி…

*நண்பர்களை அறிமுகப்படுத்தும் காட்சி…

*அமலாபாலிடம் சித்தார்த் அப்பா துணிக்கடையில் பேசுவது…

*அமலாபாலின் அப்பா சுரேஷின் காதல் எபிசோட், குறிப்பாக மகளிடம் லவ் லெட்டர் கொடுத்தனுப்புவது, அதை அவர் மனைவி படித்து மகிழும் போது அவரின் எக்ஸ்பிரஷன் அழகு…

*சுரேஷ் காதலுக்கு "வளையோசை பாடலை பேக்ரவுண்ட்ல யூஸ் பண்ணுவது...

*லெட்டரை அம்மாகிட்ட கொடுத்துடும்மான்னு சுரேஷ் அமலாபால்கிட்ட கொடுத்துட்டுப் போகும் போது மரத்திலிருந்து பூ விழுவது போன்ற காட்சிகள் ஸோ க்யூட்…

*சித்தார்த் அமலாபால்கிட்ட லவ் சொல்லும் போது, "இதை சொல்ல உனக்கு இவ்ளோ நாளாச்சா" ன்னு அமலாபால் கேட்கும் இடம் சூப்பர்…

*இயக்குனர் தலை காட்டும் காட்சிகள்… வசனங்கள்.... அனைத்தும் சூப்பர்.!!!!
ரிசல்ட்:

*எல்லாரும் கண்டிப்பா பார்க்க வேண்டிய நல்ல பொழுதுபோக்கான படம், குறிப்பாக காதலர்களும், சண்டைபோட்டு பிரிந்தவர்களும்….

*ஈகோவை விரட்டுனா லவ்ல எந்த பிரச்சினையும் இருக்காதுன்னு சொல்லிருக்கார் இயக்குனர்….நல்ல மெசேஜ்…….

*சொதப்பாமல் படம் எடுப்பது எப்படின்னு பாலாஜிமோகன் நிரூபித்துவிட்டார்….
ஹேட்ஸ் ஆஃப் பாலாஜிமோகன்…

*குமுதம், ஆனந்தவிகடன் விமர்சனத்தை எல்லாம் படிச்சு டைம் வேஸ்ட் பண்ணாதீங்க,

*KSY-ன் நல்ல விமர்சனம் படிக்கணுமா?.

*செந்தில் சி.பி யோட அட்ராசக்க ப்ளாக் பக்கம் போங்க.. விமர்சனத்தை விலாவாரியா படிங்க…
*படத்தைப் பார்த்து என்ஜாய் பண்ணுங்க… பண்ணுவீங்க…

*சினிமா சினிமா சினிமா*
adrasaka.blogspot.com

.
.
.

Sunday 5 February 2012

மொக்கை பதிவரின் மொக்கை பதில்கள் #2




11.  நாங்க படத்துக்கு போய் படம் பிடிக்கலேன்னா, கடுப்பாகி வெளில போயிடுவோம் ? நீங்க எப்புடி ? கடைசி வரைக்கும்  உக்கார்ந்து பார்த்துட்டு தான் வருவிங்களா ? நினைச்ச எங்களுக்கே கஷ்டமா இருக்கு , மறைக்காம சொல்லுங்க உங்க அனுபவத்தை ?

நான் எந்தப்படத்தையும் முழுசா பார்க்க மாட்டேன், செம போர்.. முக்காவாசிப்படம் தான் பார்ப்பேன் ஹி ஹி .. ஏன்னா பெரும்பாலான படங்கள் இடைவேளை வரை தான் நல்லாருக்கும்.. அதுவும் இல்லாம கட் அடிச்சுட்டு படம் பார்க்கறதால. எந்தப்படத்தையும் முழுசா பார்க்க முடியாது, ஆஃபீஸ்ல இருந்து கால் வந்தா கிளம்பிடுவேன்..



12. மொக்கை படத்துக்கு போய் பல்ப் வாங்குன அனுபவம் எதாவது ?

 ன்றா? இரண்டா? மொக்கைகள்.. என்னிடம் வந்து சேர்ந்தவை.. பல இருக்கு..



13. திவுகள் வெளியிட்டுருக்கிறீர்கள் தெரியும் ? எத்தனை புத்தகங்கள் எழுதியிருக்கிறீர்கள்?  -@sundaratamilan2

 ரு புக் கூட எழுதலை.. யாராவது பதிப்பகத்தார் ரெடியா இருந்தா மீ ஆல்சோ ரெடி; ஜோக்ஸ் புக், சினிமா விமர்சனம் புக், என்னை கேவலப்படுத்திய ஃபிகர்கள் பாகம் 1 டூ 10 , கவிதை புக் , தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் படங்கள் , 2011-ன் டாப் டென் படங்கள், என ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு, நல்ல மனசும் புரிதலும் உள்ள பதிப்பகத்தார் கிடைச்சா நான் ரெடி..



14. லேட்டாக பதிவுலகத்துக்கு வந்தாலும், பெரும்தலைகளோடு முட்டி மோதி உங்களுக்கும் ஒரு அடையாளத்தை பிடிக்கமுடியும்னு ஒரு நம்பிக்கை இருந்துதா?  by @NattAnu

 ல்ல, அதைப்பற்றி நான் சிந்திக்கலை..  நான் உள்ளே வந்தப்ப என் பிளாக் அலெக்ஸா ரேங்க் 18 லட்சம்.. அது 2 லட்சம் ஆக வர்ற வரைக்கும் அப்படி ஒரு நினைப்பு இல்ல. அதுக்குப்பிறகுதான் கடினமா உழைக்க ஆரம்பிச்சேன்.. இப்போ சவுக்கு தான் எனக்கு முன்னால இருக்கார்.. கேபிள்சங்கர், ஜாக்கி சேகர் எல்லாரையும் தாண்டிட்டேன்.. (இதை அடக்கத்துடன் சொல்லிக்கறேன்) தமிழ்மணம்ல 58 வாரங்கள் முதல் இடம் பிடிச்சேன், இண்ட்லில்  அதிக ஹிட்ஸ் பதிவுகள் போட்ட பதிவர்கள் லிஸ்ட்ல முதல் இடம், ஒவ்வொரு திரட்டிகளிலும் ஒரு தனி இடம் பிடிச்சிருக்கேன்..



15. நீங்க பொண்ணுங்க போடுற மென்ஷனுக்கு மட்டுந்தான் ரிப்ளை பண்ணுவீங்களா தல.?

 ஹா ஹா டெயிலி நான் ரிப்ளை போடற அய்யனார், அறிவுக்கரசு, ஷேக்,  உட்பட பலரும் ஆண்கள் தான்.. நான் 1700 ஆண்களை ஃபாலோ பன்றேன் , அது யார் கண்ணுக்கும் தெரியாது.. 130 பெண்களை ஃபாலோ பண்ணுனா அதுதான் முதல்ல தெரியும்.. அது மனித மன இயற்கை.



16. மீபத்துல பரபரப்பா பேசப்படுற பதிவுலக கோஷ்டிபிளவை பற்றி உங்கள் கருத்து என்ன.? பதிவர்கள் இரண்டு குருப்பா பிரிஞ்சு இருக்கறது உண்மையா.?

ய்யய்யோ, மறுபடியும் முதல்ல இருந்தா? இது பற்றி ஒரு போஸ்ட் போட்டுத்தான் 786 பேர் என்னை தெளீய வெச்சு வெச்சு அடிச்சாங்க.. மறுபடியும் வம்பா? அதனால நான் என்ன சொல்றேன்னா  கோஷ்டியா? அப்டின்னா என்ன? எல்லாரும் நெம்ப நெம்ப ஒற்றுமைங்கோவ்!!



17. புதிய, வளரும் பதிவர்களுக்கு உங்களின் அறிவுரை என்ன.?

ல்லாரும் நல்ல பதிவா போடுங்க.. என்னை மாதிரி லூஸ் தனமா , மொக்கை போஸ்ட் போடாதீங்க ஹி ஹி ... மற்ற பதிவர்கள் எந்த மாதிரி பதிவு போடறாங்கன்னு படிச்சுப்பாருங்க.. ஹாட் டாபிக் பற்றி போஸ்ட் போடுங்க.. அரசியல், சினிமா , நகைச்சுவை கலந்து இருக்கட்டும்.



18. ந்துல யாரு..எவ்ளோ கலாய்ச்சாலும் டென்ஷனே ஆக மாட்றீங்களே.. எப்படி இந்த மனோநிலை.?

து பிளாக்ல எல்லாரும் என்னை தாக்கி, கலாய்ச்சு போஸ்ட் போட்டு எனக்கு பழக்கமாகிடுச்சு..  அதுவும் இல்லாம உப்பு கம்மியாதான் சாப்பாட்ல சேர்த்துக்குவேன் அதான்..  ( எனக்கு இயல்பாவே ரோஷம் கம்மி ஹி ஹி )



19.  ல்லா படத்தையும் பாத்துட்டு விமர்சனம் பண்றீங்களே.உங்க வீட்டம்மா திட்ட மாட்டாங்களா.. தோராயமா சினிமாவுக்கு மட்டும் உங்க மாச பட்ஜெட் எவ்ளோ. ?   by @g4gunaa

ன் சம்சாரம் ரொம்ப நல்ல பொண்ணு, திட்ட மாட்டாங்க, வாரம் ஒரு தடவை உதைப்பாங்க ஹி ஹி....!!! வாரம் சராசரியா 3 படம் = 200 ரூபா மாசம் 12 படம்= 800 டூ 1000 ரூபா.!!!



20. சங்க மென்ஷன் போட்டா மட்டும் ரிப்ளே பண்ண ரொம்ப நேரமெடுக்குறீங்களே!அவ்ளோ கஷ்டமான கேள்வியா கேக்குறோம்? by @rAguC

டங்கொய்யால, மென்ஷன் பார்க்கவே இப்போதான்யா கத்துக்கிட்டேன், இனி பாருங்க பின்னிடறேன்.!!!



21. ப்பவும் கூலான ட்விட்ஸ் போடுறீங்களே அதுக்கு நீங்க போட்ருக்க கூலிங் க்லாஸ்தான் காரணமா?                   by @sesenthilkumar

மா, அதுவும் இல்லாம நான் கம்மங்கூழ், ராகிக்கூழ், சாப்பிட்டு உடம்பையும் மனசையும் கூலா வெச்சிருப்பேன் அதுவும்தான்.!!! ( வெளீல தனியா வாடி, உன்னை கவனிச்சுக்கறேன்... கலாய்க்கறியா ங்க்கொய்யால )



22.   1000 பதிவுகளில் எதற்க்கேணும் -ve பின்னூட்டம் வந்துள்ளதா? ஆமெனில், அதை எவ்வாறு எடுத்துக்கொண்டீர்கள்? by @Thanda_soru

 துக்கு வர்லைன்னு கேளூங்க, நாம எந்த பதிவு போட்டாலும் அதுக்கு ஆப்போசிட்டா பேச ஒரு குரூப் ரெடியா இருக்கும், ஆனா விஜய்யை கலாய்ச்சு போஸ்ட் போட்டா மட்டும் ரெகுலரா 15 பேர் வந்து திட்டிட்டு போவாங்க, அவங்க இப்போ ரெகுலர் திட்டிங்க் கச்டமர்ஸ் ஆகிட்டாங்க ஹி ஹி அதை எல்லாம் லைட்டா எடுத்துக்கனும்.. ஜாலி கலாய்ப்பை ரசிக்கற மனோ பக்குப்வம் அவங்களூக்கு கம்மின்னு நினைச்சுக்குவேன்.



 23. நீங்க படுச்சது கணக்கா இல்ல கணக்கு பண்றதா ?  by @Butter_cutter

ண்ணே, உங்க அளவுக்கு நான் கணக்கு பண்ண முடியாதண்ணே.. அன்னைக்கு ஈரோடு புத்தக திருவிழாவுக்கு வந்தப்போ ஒரு ஃபிகரை கூட்டிட்டு வந்தீங்க, என்னை பார்த்ததும் நைஸா அவங்களை ஆக்ஸ்ஃபோர்டு ஹோட்டல் பக்கம் நிக்க வெச்சுட்டு என்னை நைஸா கழட்டி விட்டுட்டு மறுபடி பார்ட்டியை பிக்கப் பண்ணிட்டு போனீங்களே, அதை நான் பார்த்துட்டேன்.. ஹி ஹி.!!!



 24. சினிமா வசனங்களை எப்படி ஒன்று விடாமல் எழுதுகிறீர்கள் ?  ரெக்கார்டும் பண்ணலை ?  அப்புறம் எப்புடின்னு சொல்லுங்க சார் ?   by @gundubulb

 ல்லாம் பழக்க தோஷம் தான்... செந்தமிழும் நாப்பழக்கம், சித்திரமும் கைப்பழக்கம். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க, ஆரம்பத்துல 10 ஜோக்ஸ் அல்லது வசனம் நினைவு வரும், போகப்போக டெவலப் ஆகிடும்..



25. நீங்க வெற்றி பெற முக்கியமான மூன்று நல்ல குணம் எவை?

 
1. தையும் லைட்டா எடுத்துக்கற சுபாவம்.
2. கோ பார்க்காமல் எல்லோரிடமும் பழகுவது.
3. டுமையான உழைப்பு, எந்நேரமும் படைப்பு, ட்வீட்ஸ், போஸ்ட் என சிந்திப்பது..
.
.
.

தொடரும்...