Saturday 14 January 2012

நண்பன்-ஆல் இஸ் வெல்- விமர்சனம்


நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
தமிழ் சினிமாவில் ரஜினிக்குப் பிறகு மிகப்பெரிய சக்தியாக கருதப்படும் விஜய், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் காம்பினேஷனில் வெளிவந்துள்ள முதல் படம்.
தமிழின் முதல் மல்டிஸ்டாரர் படம், முண்ணனி தொழில் நுட்பக் கலைஞர்கள் இணைந்து பணியாற்றிய படம் என்பதால் மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விட்டது நண்பன்....
மனதுக்குப் பிடித்ததை மட்டுமே செய்யும் பஞ்சவன் பாரிவேந்தனாக விஜய், பயந்தாங்கொள்ளி சேவற்கொடி செந்திலாக ஜீவா, போட்டோக்ராபியை விரும்பும் வெங்கட்ராம கிருஷ்ணனாக ஸ்ரீகாந்த், சைலன்சர் ஸ்ரீவத்சனாக சத்யன், காலேஜ் ப்ரின்சிபால் விருமாண்டி சந்தனமாக சத்யராஜ் (செல்லமாக வைரஸ்) என கதாபாத்திரத் தேர்வு கச்சிதம்....
விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் மூவரும் நண்பர்கள், சத்யராஜ் நடத்தும் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கிறார்கள், கல்வியியல் நடைமுறைகளை விஜய் சற்று அதிகமாகவே விமர்சிக்கிறார், முதல் சந்திப்பிலேயே இவருக்கும் சத்யராஜ்க்கும் முட்டிக்கொள்கிறது..
இவர்கள் 3 பேரும் இணைந்து அடிக்கும் லூட்டிகளும், அரட்டைகளுமே நண்பன்...சத்யனையும், சத்யராஜையும் இவர்கள் படுத்தும் பாடு அப்பாடா...
இடையில் இலியானாவுடன் காதல் டூயட் என ரவுண்ட் கட்டி அடிக்கிறார் விஜய்....
காலேஜ் முடிந்ததும் விஜய் காணாமல் போகிறார், காணாமல் போன நண்பனை மற்ற இரண்டு நண்பர்கள் தேடிப் பிடிப்பதே நண்பன் படத்தின் கதை....
அறிமுகமாகும் சீனில் தொடங்கி இறுதி வரை சிறப்பாக தன் பணியை செய்திருக்கிறார் விஜய்.
சத்யராஜ், சத்யன், ஜீவா, ஸ்ரீகாந்த் .என அனைவரின் நடிப்பும் அசத்தல்.
சத்யனின் ஸ்டேஜ் காமெடி இந்த ஆண்டின் மிகச்சிறந்த காமெடியாக இருக்கும்....மிகச்சிறப்பான நடிப்பு
ஹாரிஸ் இசையில் அஸ்கு லஸ்கா, என் பிரண்டைப் போல யாரு மச்சான், எந்தன் கண்முன்னே, இருக்கானா, ஹார்ட்டிலே பேட்டரி என அனைத்தும் ஆல் இஸ் வெல்...
பாடல்களை படம் பிடித்த விதத்தில் ஈர்க்கின்றனர் இயக்குனர் ஷங்கரும், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவும்....
ஷங்கர், கார்க்கியின் வசனங்களும் , ரசூல் பூக்குட்டியின் ஒலிப்பதிவும், பராகான்,ஷோபியின் நடனஅமைப்பு என அனைத்திலும்  அனைவரையும் கவர்கிறான் நண்பன்.....
வெற்றிக்குப் பின்னாடி போகாதே ! உனக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்துக்கோ, கஷ்டப்பட்டு உழை, வெற்றி தானா தேடி வரும்....இந்த வசனம் " நண்பன்" படத்திற்கும் சாத்தியமாகியிருக்கிறது என்றால் அது மிகையல்ல....
அமைதியான நடிப்பு, அருமையான நடனம், குறும்புத்தனம் என கலந்து கட்டி அடிக்கிறார் இளைய தளபதி...
சுருக்கமா சொல்லணும்னா "தலைவா யூ ஆர் கிரேட்" தான்...
மொத்தத்தில் நண்பன் அனைவரும் குடும்பத்துடன் பார்த்து மகிழ வேண்டிய ஆல் இஸ் வெல் சினிமா.
இந்த இனிய நாளில் அனைவருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..
நண்பன் பொங்கல்- ஆல் இஸ் வெல் பொங்கல்.......


10 comments:

  1. நல்ல விமர்சனம் - பகிர்ந்ததுக்கு மிக்க நன்றி - விமர்சனம் கொஞ்சம் தாமதமோ ? பொங்கல் வாழ்த்துக்கள் தட்சிணா !!!

    ReplyDelete
  2. சொந்தமா எழுதுனதுக்கே ஒன்னிய மேடை போட்டு பாராட்டலாம்யா!

    கொஞ்சம் அந்த பார்மல் டைப் ஆப் ரைட்டிங்ல இருந்து வெளிய வா. கட்டதொர, செந்தில் சிபி விமர்ச்சனங்கள பாரு! விமர்ச்சனத்தோட பார்ப்பவர்களின் உணர்வுகளும் அள்ளித்தெளிக்கப்பட்டிருக்கும்.

    இது போலவே இன்னும் நல்ல முன்னேற்றங்கள் காட்ட வாழ்த்துக்கள்!

    பொங்கலோ பொங்கல்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மச்சி.... கண்டிப்பாக நீ சொன்னதை அடுத்த பதிவின் போது சரி செய்கிறேன்....

      Delete
  3. விமர்சனம் படிச்சாச்சு தட்சிணா.....நல்லா இருக்கு ! நன்றி !

    ReplyDelete
  4. அருமையான விமர்சனம்..இன்னொரு வயித்தெறிச்சம் விமர்சனம்..கட்டுரை.காம் ற்க்கு அனுப்பி உள்ளென்..விரைவில் பதிவிடுவென்..கட்டதொர

    ReplyDelete
  5. வெறும் யூ ஆர் க்ரேட் சொனன எப்படி???
    அந்த மாதிரி ஒரு ஃபோட்டோ ப்ளீஸ்

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி கிடைச்சா போட மாட்டேனா ? கார்க்கி....

      Delete
  6. அருமை! தொடர்ந்து பதிவெழுதவும்! வாழ்த்துகள்!!

    ReplyDelete
  7. தொடர்ந்து எழுதுங்க. நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. >>சத்யனின் ஸ்டேஜ் காமெடி இந்த ஆண்டின் மிகச்சிறந்த காமெடியாக இருக்கும்....மிகச்சிறப்பான நடிப்பு

    வழி மொழிகிறேன்

    ReplyDelete